Subscribe Us

header ads

அமைச்சர் மேர்வின் சில்வா சிங்கப்பூரில் விபத்து

அமைச்சர் மேர்வின் சில்வா சிங்கப்பூரில் விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்து காரணமாக அமைச்சரின் காலில் உபாதை ஏற்பட்டுள்ளது.அமைச்சருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பல்பொருள் அங்காடி ஒன்றில் தன்னியக்க படியொன்றில் கால் சிக்கி விபத்துக்குள்ளதானத் தெரிவிக்கப்படுகிறது,
தன்னியக்க படியொன்றில் சிக்கிய சிறு குழந்தை ஒன்றை காப்பாற்ற முற்பட்ட போது விபத்து ஏற்பட்ட சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உபாதைக்கு உள்ளான அமைச்சர் சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். எனினும், இன்னமும் அவரது காலில் ஏற்பட்ட காயம் குணமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments