திராவிட முன்னற்றக்கழகத்திலிருந்து மு.க. அழகிரி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி, திமுகவின் தென் மண்டல செயலாளராக விளங்கியதுடன் இந்திய மத்திய அரசின் அமைச்சராகவும் முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
கட்சியின் ஒழுங்குகளை மீறியதால் அக்கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக மு.க. அழகிரி அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி, திமுகவின் தென் மண்டல செயலாளராக விளங்கியதுடன் இந்திய மத்திய அரசின் அமைச்சராகவும் முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
கட்சியின் ஒழுங்குகளை மீறியதால் அக்கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக மு.க. அழகிரி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் திமுக கூட்டணி அமைப்பதற்கு எதிராக அழகரி கருத்துத் தெரிவித்தமை இத்தகைய கூட்டணியை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை ஆகியவை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளே இந்த இடைநிறுத்தத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து திமுக. பொதுச்செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில்,
"கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராய பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில், தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும் - திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள் இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும் - அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் - அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமை யோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க. அழகிரி எதிர்வரும் 30 ஆம் திகதி தனது பிறந்த தினவிழாவை மதுரையில்
விமர்சையாக கொண்டாடப்படவிருந்த நிலையில், அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது குறித்து அழகிரி உடனடியாக கருத்துத் தெரிவிக்கவில்லை.


0 Comments