தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட சிலையொன்றில் காதுப்பகுதிகள் செதுக்கப்பட்டுள்ள முயல் உருவத்தை அகற்றுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நெல்சன் மண்டேலாவின் 9 மீற்றர் (29.5 அடி) உயரமான சிலை பிரிட்டோரியா நகரில் கடந்த 16 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. நெல்சன் மண்டேலாவின் மிக உயரமான சிலை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெண்கல சிலையின் காதுக்குள் முயல்சிற்பமொன்றும் செதுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிலையை உருவாக்கியவர்கள் தமது கையொப்பத்தை சிலையின் காற்சட்டைப் பகுதியில் பொறிப்பதற்கு அனுமதிக்படாததால் தமது சின்னத்தை சிலையின் காதுக்குள் பொறிதுள்ளதாக தென்னாபிரிக்க பத்திரிகையொன்ற செய்தி வெளியிட்டது.
இச்சிலையை நிர்மாணித்த சிற்பிகளான அன்ட்ரோ பிரின்ஸ்லோ, ருஹான் ஜேன்ஸ் hவன் வுரென் ஆகியோர் இத்தகைய முயல் உருவத்தை சிலைக்குள் பொறித்தமை தமக்குத் தெரியாது எனக் கூறியதாக தென்னாபிரிக்காவின் கலை கலாசார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்சிலையை உருவாக்கிய சிற்பிகள் இந்த முயல் உருவம் செதுக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோரியுள்ளதாக கலை, கலாசார அமைச்சர் போல் மாஷாடில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முயல் உருவத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments