Subscribe Us

header ads

15 - 25 வயதுக்கு இடைப்பட்டோரிடையே எயிட்ஸ் தொற்று வீதம் அதிகரிப்பு: ஓரினச் சேர்க்கையாளர்களில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக பாதிப்பு

(பிஸ்ரின் முஹம்மத்)

15 - 25  வயதுக்கு இடைப்பட்டோருக்கு  எயிட்ஸ் தொற்று  வீதம் அதிகரித்துள்ளதாகவும் கடந்த வருடம் நாட்டில் இனங்காணப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளில் 25 வீதமானவர்கள்  இந்த வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள். எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எச்.ஜ.வி எயிட்ஸ் தடுப்புபிரிவின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சிசிர லியனகே  தெரிவித்தார்.

எச்.ஐ.வி. தோற்றில் 75 சத வீதம் ஆண் - பெண் உறவின் மூலம்  ஏற்படுவதாகவும் ஆண்களுக்கிடையிலான  ஓரின சேர்க்கையால் 25 வீதம் எச்.ஜ.வி தொற்று இடம் பெறுவதாகவும் தெரிவித்துள்ள அவர்,; ஆண்களுக்கிடையிலான ஓரினச் சேர்க்கை உறவின்போது இரத்தத்தில்  எச்.ஜ.வி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதோடு,  பெண்களுக்கிடையிலான ஓரினச் சேர்க்கையால் எச்.ஜ.வி தொற்று மிகவும் அரிதாகவே இடம் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 1989-2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டில் 1,845 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு 2013 ஆம் ஆண்டு 196 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டனர்;. இவர்களில் 330 பேர் எயிட்ஸ் நோயின் காரணத்தால் இதுவரை உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளதாகவும், இனங்காணப்பட்ட நோயாளிகள் இந்தளவு இருந்த போதிலும் நாட்டில் 3000 - 5000 எயிட்ஸ் நோயாளிகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாலியல் தொழில், ஓரினச்சேர்க்கை, ஊசி மூலம் போதைப்பொருள் பாவித்தல், கடற்கரை இளைஞர்கள் (பீச்போய்ஸ்)  ஆகியோரால்  எச்.ஜ.வி பரவும் வீதம் அதிகமாகவுள்ளமை  அறியப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு மத்தியில் எச்.ஜ.வி தொற்றை தடுக்கும் முகமான பல விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு,  குறிப்பாக அவர்கள் மத்தியில் ஆணுறை பயன்பாட்டை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதனூடாக எச்.ஜ.வி தொற்றை தடுப்பதற்கான  முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments