2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சைக்குத் தோற்றி அதி கூடிய புள்ளிகளைப் பெற்று பிரபல பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் கல்வி கற்பதற்குது தமைமை பெற்றும் பிரபல்ய பாடாலைகளில் அனுமதி கிடைக்காத மாணவர் தங்களது முறையீட்டை அதிபர் ஊடாக கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்க முடியுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதாவது,
ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் புலமைப் பரிசிலைப் பெறத் தகைமை பெற்ற மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் அனுமதி பெற்று கல்வி கற்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
அந்தவகையில,; கடந்த வருடம் நடைபெற்ற இப்பரீட்சையில் தகைமை பெற்று பிரபல்ய பாடசாலைகளில் அனுமதி கிடைக்காத மாணவர்கள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பாடசாலை அதிபர் ஊடாக முறைப்பாடுகளை கல்வி அமைச்சின் பாடசாலைகள் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளரிம் சமர்ப்பிக்க முடியுமென கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இவ்வாண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறுமெனவும் கடந்த காலங்களில் நடைபெற்ற பரீட்சை வினாக்களின் வடிவமைப்பிலேயே கேள்விகள் அமையுமெனவும். அதில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments