கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்கமைய கொழும்பு கொம்பனித்தெரு பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில பிரதேசங்களில் வசித்து வரும் குடும்பங்களின் குடியிருப்புக்கள் அகற்றப்படும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இன்று 27-01-2014 கொம்பனித்தெரு டீ சொய்சா மாடிவீடு அகற்றும் நடவடிக்கை ஆரம்பமானது. இம்மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையலேயே தற்போது வீடுகள் அகற்றப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருட காலத்திற்குள் இவர்களுக்கு புதிய வீடுகள் அப்பிரதேசத்தில் வழங்கப்படவுள்ளது. இதற்காக இரண்டு வருடகாலத்திற்கான வாடகைப்பணம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments