சவூதி அரேபியாவில் பெண் சட்டத்தரணியொருவரின் முதலாவது அலுவலகம் கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் சவூதி அரேபிய வரலாற்றில் பெண் சட்டத்தரணியொருவர் சொந்தமாக சட்ட அலுவலகமொன்றை நடத்துவது இதுவே முதல் தடவையாகும்.
3 கோடி மக்களைக் கொண்ட சவூதி அரேபியாவில், பெண் சட்டத்தரணிகள் அலுவலகம் நடத்துவதற்கு அனுமதியளிப்பதற்கு கடந்த வாரம் மேற்படி சவூதி அரேபியாவின் நீதி அமைச்சு தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து மேற்படி அமைச்சிடம் அனுமதி பெற்றபின் பயான் ஸஹ்ரன் எனும் பெண் சட்டத்தரணி இந்த முதல் அலுவலகத்தை திறந்துள்ளார். ஜெத்தா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பல சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், பெண்கள் மற்றும் ஏனைய துறைசார் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டதாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் பயான் ஸஹ்ரான் தானே நேரடியாக நீதிமன்றில்ஆஜராவாரா அல்லது அவருக்குப் பதிலாக ஆண் சட்டத்தரணிகள் ஆஜராகுவரா என்பது தெரியவில்லை.
சவூதி அரேபியாவின் 300 பெண்களுக்கு சட்டத்தரணிகளாக பணியாற்ற அனுமதி வழங்கப்பபடும் என லண்டனைத் தளமாகக் கொண்ட அரபுமொழி பத்திரிகையான ஷார்க் அல் அவ்சாத் தெரிவித்துள்ளது.
பெண் சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட் குழுவிலுள்ள சிலர், திருமணம், விவாகரத்து, குழந்தை பராமரிப்பு, தாபரிப்பு, போன்ற வழக்குகளில் மாத்திரம் பெண் சட்டத்தரணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்ததாகவும் ஆனால் முழுமையான சட்டத்தரணியாக பணியாற்ற அனுமதி பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கூறியதாகவும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.

0 Comments