கஞ்சாவை சட்ட ரீதியாக்குமாறு பௌத்த
பிக்குகளும் கோருவதாக ஆளும் கட்சியின் அமைச்சர் சுமேதா ஜயசேன
தெரிவித்துள்ளார். தமது தேர்தல் தொகுதியைச் சேர்ந்த பலர் கஞ்சா வளர்ப்பை
சட்ட ரீதியாக்குமாறு கோரி வருவதாகவும்
அவர்களில் பௌத்த பிக்குகள் சிலர் கஞ்சா வளர்ப்பை சட்ட ரீதியாக்குமாறு கோரி
வருவதாக பாராளுமன்ற விவகார அமைச்சர் சுமேதா ஜயசேன குறிப்பிட்டுள்ளார்.
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் நடைபெற்ற
நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தனமல்வில
பிரதேசத்தில் கஞ்சா செய்கையில் ஈடுபடாத ஒருவரைத் தேடிப்பிடிப்பது சவாலானது
என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கஞ்சா செய்கையை சட்ட ரீதியாக்கும் வகையில்
பாராளுமன்றில் சட்டம் நிறைவேற்றுமாறு பௌத்த பிக்குகள் எம்மை நாடி கோரிக்கை
விடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
பலவீனமடைந்துள்ளதாகவும் எந்தவொரு காலத்திலும் ஆட்சி அமைக்கக் கூடிய
சாத்தியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

0 Comments