Subscribe Us

header ads

கற்பிட்டி கடலில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

கற்பிட்டி கடல் எல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த  நிலையில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் ஜனவரி 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய செல்வி பாரதி விஜேரத்ன இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது அவர்கள் பயணித்த மீனவ படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன. பின்னர் குறித்த மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் கற்பிட்டி பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை மாலை புத்தளம் பதில் நீதவான் எம்.ஏ.பஸால் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இந்த மீனவர்கள் இன்று  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பின்னர் அவர்கள் இன்று மீண்டும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, இம்மாதம் 20ம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments