Subscribe Us

header ads

ஜனா­தி­பதிக்கு பலஸ்தீன அதி­யுயர் விருது

பலஸ்தீன் அரசின் அதி­யுயர் விரு­தான பலஸ்­தீனின் நட்­சத்­திரம் விரு­தினை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷக்கு பலஸ்தீன் அர­சாங்கம் நேற்று வழங்கி கௌர­வித்­ததுள்ளது.
 
'இலங்­கைக்கும் பலஸ்­தீன அர­சுக்­கு­மி­டை­யி­லான உறவு தனித்­து­வ­மா­னது, பலஸ்­தீன அர­சுக்கும் நட்­பு­ற­வு­மிக்க பலஸ்­தீன மக்­க­ளுக்கும் நாம் எப்­போதும் எமது முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­குவோம்' என இவ்­வி­ருது வழங்கும் விழா­வின்­ போது ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.
 
இலங்கை மக்கள் சார்­பாக ஜனா­தி­பதி ராஜ­பக் ஷ, முன்னாள் பலஸ்தீன் ஜனாதிபதி யாசீர் அர­பாத்­துக்கும் தற்­போ­தைய ஜனா­தி­பதி மஹ்மூத் அப்­பா­ஸுக்கும் லங்கா மித்ர விபூ­ஷன விரு­தினை வழங்­கி­வைத்தார்.
 
ஜனா­தி­ப­தி­யுடன் முதற்­பெண்­மணி ஷிரந்தி விக்கி­ர­ம­சிங்க ராஜ­ப­க் ஷவும் ஜோர்தான், பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் ஆகிய மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தில் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்­து­ சென்­றுள்ள இலங்கை தூதுக்­கு­ழு­வி­னரும் இவ்­வை­ப­வத்தில் கலந்­து­கொண்­டனர்.
 
வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல். பீரிஸ், வெளி­வி­வ­கார அமைச்சின் கண்­கா­ணிப்பு உறுப்­பினர் சஜின் த வாஸ் குண­வர்­தன,பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரொஷான் ரண­சிங்க, திரு­மதி கமலா ரண­துங்க, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜோர்தானுக்கான இலங்கைத் தூது வர் காமினி ராஜபக் ஷ ஆகியோர் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments