பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மஹேல ஜயவர்த்த தனது 32 ஆவது டெஸ்ட் சதத்தினைப் பூர்த்தி செய்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே இறுதியாக மஹேல ஜயவர்த்தன டெஸ்ட் போட்டிகளில் சதம் குவித்திருந்தார்.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே இறுதியாக மஹேல ஜயவர்த்தன டெஸ்ட் போட்டிகளில் சதம் குவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில போட்டிகளாக துடுப்பாட்டத்தில் சோடைபோயிருந்த மஹேல இப்போட்டியில் மீண்டும் தனது பலத்தினை நிரூபித்துள்ளார்.
நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து நேற்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்று 2 ஆவது நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 318 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் உள்ளது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌசல் சில்வா 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அவரது கன்னி சதத்தினைத் தவறவிட்டார்.
ஆடுகளத்தில் மஹேல 106 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் மெத்தியூஸ் 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

0 Comments