Subscribe Us

header ads

தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: பீட்டர்சன்

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்  மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் ஐந்து போட்டிகளிலும் இங்கிலாந்தை வெள்ளையடிப்பு செய்தது அவுஸ்திரேலியா
 
இந்நிலையில் இங்கிலாந்து மீது விமர்சன கணைகள் பாய்ந்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்து நட்சத்திர துடுப்பாட்ட கெவின் பீட்டர்சனை முன்னாள் வீரர்கள் குறை சொல்லி வருகிறார்கள். 
 
‘‘டெஸ்டில், ஒரு நாள் போட்டி போன்று இங்கிலாந்து அணி முட்டாள்தனமாக ஆடி விட்டது. நேர்த்தியான பந்து வீச்சை எதிர்கொள்ள களம் இறங்கும் போது, பொறுமையுடனும், கவனமுடன் செயல்ட வேண்டும். ஆனால் பீட்டர்சன் அதை செய்யவில்லை’’ என்று முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் தாக்கினார். 
 
அடுக்கடுக்கான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் 33 வயதான கெவின் பீட்டர்சன், கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் முடிவுக்கு வரலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பீட்டர்சன், ஓய்வு எண்ணம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். 
 
இது தொடர்பில் அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிடுகையில்,
 
 ‘ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-5 என்ற கணக்கில் இழந்ததும், தனிப்பட்ட முறையில் நான் நிறைய ஓட்டங்கள் குவிக்காததும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகின் தரமான அணிக்கு எதிராக, கடினமான ஒரு சுற்றுப்பயணாக இது அமைந்து விட்டது. ஆஷஸ் தொடரின் போது எங்களுக்கு முழுமையாக ஆதரவு தந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
 
2015ஆம் ஆண்டு நடக்கும் ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் எங்கள் அணி வெல்வதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆஷஸ் தொடரில் பீட்டர்சன் 5 டெஸ்டையும் சேர்த்து 294 ஓட்டங்களை எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் இவர் தான். 
 
இங்கிலாந்து வீரர்களில் ஒட்டுமொத்தத்தில் அதிக ஓட்டங்களை குவித்தவர்களின் பட்டியலில் நான்காவது இடம் (104 டெஸ்டில் 8181 ஓட்டம்) வகிக்கும் பீட்டர்சன், தென்னாபிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments