அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு
நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி,
கனடாவின் கிழக்குப் பகுதி ஆகியவற்றில் கடும் பனிக்காற்று வீசுவதால்
பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி முடங்கிக் கிடக்கின்றனர்.
தோலில் பனி வெடிப்புகள் ஏற்படுவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முகம் தவிர
உடல் முழுவதும் கம்பளி உள்ளிட்ட ஆடையால் மூடியுள்ளனர்.
சாலைகளில் மிக அதிகமாக பனி மூடியுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பனிச் செதுக்கும் கருவி மூலம் சாலைகளில் உறைபனிகள் அகற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
நாட்டின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸாக இருந்தது.
மின்னியாபோலிஸில் வங்கிகள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்தன. அங்கு
மைனஸ் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன், கடும் குளிர் காற்றும் வீசியது.
மில்வாகீ, செயின்ட். லூயிஸ் மற்றும் சிகாகோவில் மைனஸ் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது.
ஒக்லகோமா, டெக்ஸாஸ் மற்றும் இண்டியானா ஆகிய பிராந்தியங்களில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்காற்று வீசுகிறது.
மின்சாரம் தடைபட்டதால் மத்திய அட்லாண்டிக் மற்றும் மத்திய மேற்கு
மற்றும் தெற்கு பகுதிகளில் 61 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்றும், கடந்த சனிக்கிழமை முதல் இத்தகைய குளிருக்கு பலர் உயிரிழந்து
வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.











0 Comments