இம்மாத இறுதியிலேயே 7 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.)
தொடருக்கான போட்டி அட்டவணை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என
ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு 7 ஆவது ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மே
மாதம் வரை நடைபெறவுள்ளது. எனினும் இத்தொடருக்கான போட்டி அட்டவணை
இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தொடர் நடைபெறவுள்ள குறித்த காலப்பகுதியில் இந்திய பாராளுமன்ற
தேர்தல் நடைபெறவுள்ளதாலேயே போட்டிக்கான திகதியை முடிவு செய்வதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 2009 ஆம்
ஆண்டும் ஐ.பி.எல். போட்டி தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.
தற்போது அதே சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தியாவில் பாதி
போட்டிகளையும், தென்னாபிரிக்காவில் மீதி போட்டிகளையும்
நடத்தலாமா? என்று ஆய்வு செய்யப்படுகிற அதேவேளை இலங்கையிலும் சில
ஆட்டங்களை நடத்துவது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
இந்நிலையிலேயே ஐ.பி.எல். நிர்வாக்குழு இம்மாத இறுதியில்
கூடுகின்றது. இதில் தொடருக்கான போட்டி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்
என தெரிவிக்க ப்பட்டுள்ளது.


0 Comments