பிலிப்பைன்ஸுக்கும் இலங்கைக்கும்
இடையிலான ஆசிய கடல்சூழ் பிராந்திய இரண்டாம் குழுவுக்குரிய டேவிஸ்
கிண்ண முதல் சுற்றுப் போடடி கொழும்பிலுள்ள இலங்கை டென்னிஸ் சங்க
கடினதரை அரங்கில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு ஒற்றையர், ஓர் இரட்டையர், இரண்டு இரட்டையர் ஆட்டங்களைக் கொண்ட
இப் போட்டிக்கான குலுக்கல் கொ ழும்பில் நேற்று நடைபெற்றது.
சர்வதேச டென்னிஸ் சம்மேளன பிரதிநிதி முன்னிலையில் நடைபெற்ற
இந்தக் குலுக்கலின்போது இரண்டு அணிகளினதும் வீரர்கள்,
பயிற்றுநர்கள், விளையாடாத அணித் தலைவர்கள் ஆகியோர்
பிரசன்னமாகியிருந்தனர்.
இதன் பிரகாரம் இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது
ஒற்றையர் போட்டியில் இலங்கையின் ஹர்ஷன கொடமான்னவை பிலி ப்பைன்ஸின்
பெட்றிக் ஜோன் டியரோ எதிர்த்தாடவுள்ளார்.
இலங்கையின் தினேஷ்காந் தன் தங்கராஜாவும் பிலிப்பைன்ஸின் ரூபென்
கொன்ஸாலெஸும் மோதும் இரண்டாவது ஆட்டம் இன்று பிற்பகல் நடைபெறும்.
நாளை நடைபெறவுள்ள இரட்டையர் போட்டியில் ஹர்ஷன கொடமான்னவும் ரஜீவ்
ராஜபக் ஷவும் ஜோடி சேர்ந்து பிலிப்பைன்ஸின் ஜொனி ஆர்சில்லா மற்றும்
ட்ரீட் ஹுவே ஜோடி யை எதி ர்த்தாடவுள்ளனர்.


0 Comments