பத்தரமுல்லை, கொஸ்வத்தை-மாலம்பே பகுதியில் எரிபொருள் நிரப்பும்
நிலையத்திற்கு அருகில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தினால் நாவல வீதியில் பாரிய வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன்
தீயை கட்டுப்படுத்துவதற்கு கொழும்பிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள்
வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீவிபத்து இடம்பெற்ற இடத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம்
மட்டுமன்றி லாப் காஸ் களஞ்சியசாலையும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments