Subscribe Us

header ads

பால் மாவை பதுக்கும் வர்த்தகர்களை கைது செய்ய நடவடிக்கை

ஒருசில வர்த்தகர்களின் பதுக்கல் நடவடிக்கையே, சந்தையில்
பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிடுகின்றது.

பால்மாவை பதுக்கிவைக்கும் வர்த்தர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தெரிவிக்கின்றார்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை பால்மா அண்மையில் சீதுவை மற்றும் வத்தளை பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், பால்மாக்களின் விலையை உயர்த்துவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நுகர்வோர் விவாகர அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

Post a Comment

0 Comments