கேரள கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாகக் கூறப்படும் மூவர்
கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து கேரள கஞ்சாவையும் பொலிஸார்
கைப்பற்றியுள்ளனர்.
கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இவர்களைக் கைதுசெய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி, பாலாவி, கண்டக்குளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்கள் கடந்த காலங்களில் வெளியிடங்களிலிருந்து கேரள கஞ்சாவை கற்பிட்டி
பிரதேசத்திற்குக் கொண்டு வந்து விற்பனை செய்து வந்திருப்பதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா
கொள்வனவுக்காக செல்வது போன்று சென்று இவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும்
பொலிஸார் கூறினர்.
அண்மை காலங்களில் கற்பிட்டி பகுதிகளில் கேரளா கஞ்சா பவனை அதிகமாக காணபடுகிறது குரிபிடதகதாகும்.
கேரள கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாகக் கூறப்படும் மூவர்
கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து கேரள கஞ்சாவையும் பொலிஸார்
கைப்பற்றியுள்ளனர்.

0 Comments