கர்ப்பிணிகள் கர்ப்பமாக இருக்கும் போது தான் நிறைய உணவுப் பொருட்களின் மீது ஆசை ஏற்படும்.
குறிப்பாக சிற்றுண்டிகளில் விற்கப்படும் பாஸ்ட் புட் (fast food)
உணவுகளின் மீது ஏற்படும் ஆசைக்கு அளவே இருக்காது. ஆனால் அந்த உணவுப்
பொருட்கள் அனைத்தும் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆரோக்கியமற்றதாகும்.
மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்.
எனவே கர்ப்பிணிகள் பாஸ்ட் புட் உணவுகளை உண்ணாமல் இருப்பதே சிறந்ததாகும்.
அதிலும் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட நினைக்காமல் இருப்பது நல்லது.
பாஸ்ட் புட் உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளதால்
பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிப்பதோடு குழந்தையின்
ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பிரசவத்திற்கு முன்பு கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத பாஸ்ட் புட் உணவுகள்,
1.டப்நட்ஸ் (Doughnuts)
இது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளாக இருப்பதால் இதனை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
2. நூடுல்ஸ்
நூடுல்ஸில் கலோரிகள் அதிகம் உள்ளதால் இதனை சாப்பிட்டால் கர்ப்ப காலத்தில் அதிகப்படியான எடையை அதிகரிக்க நேரிடும்.
3. பர்கர், உருளைக்கிழங்கு விட்ஜஸ்
பாஸ்ட் புட் உணவிலேயே மிகவும் தீங்கான ஒரு உணவுப் பொருள் பர்கர் தான்.
இதை உண்பதன் மூலம் அதிக உடற் பருமன் ஏற்பட வாய்ப்புண்டு. மற்றும் உருளைக்
கிழங்கில் 280 கலோரிகள் இருப்பதால் குறைப்பிரசவத்திற்கு வழிவகுத்துவிடும்.
4. பீட்ஸா
பீட்ஸாவின் மேல் தூவப்படும் பொருட்கள் வயிற்றில் வளரும் சிசுவிற்கு
மிகவும் மோசமானவை. ஆகவே இதனை கர்ப்ப காலத்தில் அறவே தவிர்க்க வேண்டும்.


0 Comments