Subscribe Us

header ads

பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

(A.J.M Makthoom)


பரப்புரை செய்யப் படும் இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு (Islamophobia) க்கும் மற்றும் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் அண்மையில் மயோட்டே தீவில் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடாத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மயோட்டே தீவு என்பது பிரான்சிடமிருந்து விடுதலையடைந்து தற்போது சுயாட்சி நடாத்தி வரும் கோமோரஸ் தீவுக்குழுமத்திலிருந்து ஒரு ஆப்பிரிக்க தீவாகும்.

ஜனவரி முதலாம் திகதி பன்றியின் தலையை எரிந்து இனம் தெரியாதோர் சிலர் அங்கே பேதித் டெர்ரி என்னுமிடத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றை சேதப் படுத்தி இருந்தமை குறிப்பிடத் தக்கது.

உள்ளூர் அரசு குறித்த சம்பவம் தொடர்ப்பில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமையே முஸ்லிம்களின் மேற்படி விசனத்திற்கு காரணமாகும் என தெரிவிக்கப் படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குறித்த இனவாத தாக்குதலுக்கு தமது கண்டனத்தை தெரிவித்ததோடு, இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும் மேற்படி இனவாத செயற்பாடுகள் மத ரீதியான வெறுப்புணர்வை அதிகரிக்கும் அதேவேலை பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து விடும் எனவும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments