இந்திய பணியாளர்களுடன் சென்ற சவூதி கப்பல் ஒன்றை சோமாலிய கொள்ளையர்கள்
கடத்தியுள்ளனர்.ஆப்ரிக்கா மற்றும் ஆசிய கண்டத்திற்கு இடையே அமைந்துள்ள
செங்கடல் வழியாக சவூதி அரேபியாவிற்கு சொந்தமான சரக்கு கப்பல் பயணித்தது.
இந்த நிலையில் அதனை கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கப்பலில் இருந்து துயரத்திற்கான சமிஞ்சைகள் மாத்திரம் கிடைத்தாக கென்ய மாலுமிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
9 பேர் கொண்ட ஆயுதமேந்திய சோமாலியா கடல் கொள்ளையர்களால் இந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


0 Comments