Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று - ஜனவரி 29

1595 : ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.

1676 : மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.

1814 : நெப்போலியன் போனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது.

1819 : பிரித்தானியரான ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.

1834: அமெரிகக்hவில் தொழிலாளர்களின் கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவத்தை பயன்படுத்துமாறு ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸன் உத்தரவிட்டார்.

1863 : ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் ஷோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1886 : ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெற்றோலினால் இயங்கும் முதலாவது மோட்டார் வாகனத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1916 : முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.

1929 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.

1940 : ஜப்பானின் ஒசாக்காவில் 3 ரயில்கள் ஒன்றுடமெனார்னறு மோதி வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.

1944 : இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறுழத்தாழ 38 பேர் கொல்லப்பட்டனர்.

1989: தென்கொரியாவுடன் ஹங்கேரி ராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்தியது. தென்கொரியாவுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் கிழக்கு ஐரோப்பிய நாடு ஹங்கேரி ஆகும்.

1996 : இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.

1996: பிரான்ஸின் அணுவாயுத பரிசோதனைகள் முடிவடைந்ததாக ஜனாதிபதி ஜக் சிராக் அறிவித்தார்.

2001: இந்தோனேஷியாவில் ஜனாதிபதி அப்துல் ரஹ்மான் வாஹிட்டுக்கு  எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2005 : சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானை சென்றடைந்தது.

Post a Comment

0 Comments