Subscribe Us

header ads

கற்பிட்டி கூட்டுறவு சங்கத்தின் அடுத்த தலைவர் யார்???? பாதாளத்தில் கிடக்கும் சங்கத்தை மீட்டெடுப்பது யார்????

மட்டுப் படுத்தப்பட்ட கற்பிட்டி பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர்சபைத் தெரிவு எதிர்வரும் 2014 ஜனவரி 14ம் திகதி கற்பிட்டிக் கூட்டுறவுச் சங்க காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 

கடந்த மாதம் நடைபெற்ற கிழைச்சங்கத் தேர்தல்களில் வெற்றி பெற்ற சுமார் 70 பேர்களைக் கொண்ட மகா சபை அங்கத்தவர்களுள் ஏழு (7) பேர் கொன்ட குழுவைத் தெரிவு செய்யும் தெரிவே 14ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தெரிவு ஏக மனதாகவோ அல்லது வாக்கெடுப்பு மூலமாகவோ நடைபெறும் சம்ரதாயம் கொண்டதாக அமைந்தாலும், தற்போதைய நடவடிக்கைகளை அவதானிக்கும் போது கட்டாயம் வாக்கெடுப்பு நடைபெறும் என்பது ஊா்ஜீதமாகியுள்ளது.

  • கடந்த கால தலைமைத்துவம் பற்றிய ஒரு பார்வை.
எது எவ்வாறாயினும் கடந்த பணிப்பாளர் சபைத் தெரிவில் தமது பிரதேச சபை உறுப்பினர் பதவியையும் துறந்து கற்பிட்டிக்கு இதிலாவது தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நியாயமான போராட்டத்தை நடத்தி சகோதரர் இன்பாஸ் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அவரை பெரிய பள்ளி தலைர் சாஜஹான் அவர்கள் உற்பட அயிரக்கனக்கான மக்கள் கண்டல்குடாவிலிருந்து ஊர்வலமாக அழைத்து வந்ததை யாரும் மறந்திருக்க வாய்பில்லை. இருப்பினும் அது நிறைய நாட்கள் நீடிக்க வில்லை. மீண்டும் பிரதேச சபைத் தேர்தல் அறிவித்தவுடன் இன்பாஸ் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்படவே அதில் போட்டியிடுவதற்காக பணிப்பாளர் பதவியை இராஜினாமாச் செய்து பைசல் அவர்களுக்கு பதவியை வழங்கி கற்பிட்டியின் தலைமைத்துவத்தை மீண்டும் உறுதி செய்தார். இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் முதலைப்பாளியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உப தலைவரினதும், முஸல்பிட்டியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரதும் ஊது குழலுக்கு பைசல் அடங்கியதால் பல்வேறு நிதி மோசடிகளை அந்த பணிப்பாளர் சபை சந்திக்க நேர்ந்தது கற்பிட்டி மக்களின் ஒரு துர்பாக்கிய நிலையாக கருதப்பட்டது. கூட்டுறவு சங்க அதிகாரிகளிடமிருந்து உப தலைவர் உற்பட உறுப்பினர்கள் பலர் பெற்ற கைமாற்று நடவடிக்கைகள் அவர்களை நாட்டை விட்டு வௌியேறுவதற்கான தூண்டுதலாக அமைந்ததுடன் நாட்டை விட்டு வௌியேற இவர்களுள் பலர் உதவி செய்து விமான நிலையம் வரை சென்று வழியனுப்பிய உண்மைக் கதைளுமுன்டு. முறைகேடான வவுச்சர்கள் இடப்பட்டு முதலைப்பாளி, முஸல்பிட்டிக்கு தலா 5 இலட்சத்திற்கும் அதிகமான மண்ணென்னை, பெற்றோல் போன்றன மகாமைத்துவ முறைமைக்கு முரனான செயல்களாக இருந்நும் இதனை மேல் மட்ட அதிகாரிகள் தட்டிக் கேட்டும் சில அரசியல் வாதிகளினால் இவர்கள் பாதுகாக்கப்பட்டு வந்தனர். 

இவர்களுடைய காலப்பகுதியில் மட்டும் சுமார் 2 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்த கூட்டுறவு சங்கம் ஒரு கட்டத்தில் பணியாட்களுக்கு சம்பளம் வழங்கக் கூட தின்டாடியது. பின்னர் அதன் நிலையான வைப்பீட்டுக்  கணக்கிலிருக்கும் 4 கோடி ரூபாவினை எடுத்து சம்பளம் வழங்கலாம் என பணிப்பாளர் சபை பல முறை முயற்சி செய்ததாலும் வட மேல் மகாண கூட்டுறவுச்சங்க ஆணையாளர் அனுமதியளிகாததனால் அந்த பணம் காப்பாற்றப்பட்டது.

  • புதிய பணிப்பாளர் சபைத் தெரிவு.

எதிர் வரும் 14ம் திகதி நடைபெறும் பணிப்பாளர் தெரிவில் கற்பிட்டியைச் சேர்ந்த 3 முக்கிய உறுப்பினர்களும், குறுஞ்சிப்பிட்டி, ஏத்தாளை, நுரைச்சோலை ஆகிய கிளைச்சங்கங்களைப் பிரதிநிதிப் படுத்தும் 3 நபர்களும் தலைமைத்துவத்திற்காக போட்டியிட தயாராகியுள்ளதாகவும், இவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னும் மிக முக்கிய அரசியல் தலைகள் செயற்பட்டு வருவதையும் காணக்கிடைக்கின்றது. உண்மையில் சொல்லப் போனால் இது அந்த அரசியல் வாதிகளுக்கிடையிலுள்ள தேர்தல் செயற்பாடுகளைப் போன்று காணப்படுவதாக அவதானிகள் குறுப்பிடுகின்றனர்.

கற்பிட்டியை மையப்படுத்தி 3 தலைவர்கள் களமிறங்கியிருப்பது கற்பிட்டியின் தலைமைத்துவத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகவேதட தென்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் யார் யார் உறுப்பினர்கள் என்றும், யார் தலைவர் என்றும்.

ஆனால் தெரிவு செய்யப் படுபவர்கள் தமக்குள்ளே கீழ்வரும் கேழ்விகளுக்கு விடைத் தேடக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதே நமது அவா...

  1. கடந்த தலைமைத்துவத்தின் மோசடிகள் என்னென்ன? அதனைக் கண்டறியும் திறன் தமக்கு இருக்கின்றதா? ( அந்த திறன் இல்லாவிட்டால் தெரிவு செய்யும் தலைவர்தான் அதற்கான விளைவுகளையும் சந்திக்க நேரிடும்)
  2.  கூட்டுறவு சங்கம் தற்போது எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் என்ன? அதனை இனம் காணக் கூடிய திறன் தன்னிடம் உள்ளதா?
  3. அந்நப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அல்லது குறைப்பதற்கு தான் முன்வைத்து எதிர் பார்க்கும் திட்டங்கள் என்ன என்பது பற்றிய அறிவு என்னிடம் இருக்கின்றதா?
  4. எதிர்காலத் திட்டமிடல் பற்றிய அறிவும், சங்கத்தை இலாபகரமாக முன்னெடுத்துச் செல்வதற்குமான ஆற்றல் தம்மிடம் உள்ளதா?
இது போன்ற கேள்விகளுக்கு விடைகானாத தலைவர் ஒருவரை எந்த அரசியல் வாதி முன்நிறுத்தினாலும் அந்த அரசியல் வாதிகள் நாளை இதற்காக பொறுப்புக் கூறப் போவதில்லை. மீண்டும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே.

Post a Comment

0 Comments