Subscribe Us

header ads

இணைய இணைப்புகொண்ட பற்தூரிகை

இணையத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட பற்தூரிகையொன்று  கடந்த ஞாயிறன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பற்களில் படிந்திருக்கும் எவ்வளவு துகள்கள் அகற்றப்படுகின்றன என்பதை இந்த பற்தூரிக்கையில் பொருத்தப்பட்டுள்ள உணரிகள்  கண்டறியும். அத்துடன் பல்துலக்கம் நடவடிக்கை ஒவ்வொன்றையும் இது பதிவுசெய்வதால்,  பற்களை துப்பரவாக்குவதில் ஒரு சீரான தன்மையை பாவனையாளர்கள் பேண முடியும்.

பிரான்ஸை தளமாகக்கொண்ட கொலிப்றீ எனும் நிறுவனம் இப்பற்தூரிகையை தயாரித்துள்ளது. இணைய இணைப்பு கொண்ட உலகின் முதலாவது பற்தூரிகை இதுவாகும். 

வாய் சுகாதாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்குடன் இத்தூரிகை
தயாரிக்கப்படடுள்ளதாக  மேற்படி நிறுவனத்தின் இணைய ஸ்தாபகரான லொய்க் செசோட் கூறியுள்ளார். இத்துறையில் நீண்டகாலமாக மாற்றங்கள் இல்லாமல் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார். 

பற்தூpகையிலுள்ள உணரியில் (சென்ஸர்) பதிவாகும் தகவல்கள் வயர்லெஸ் முறையில், அப்ஸ் (யிp)  ஒன்றுக்கு அனுப்பப்படும். இது சிறு குழந்தைகளின் பல்துலக்கலை கண்காணிப்பதற்கு பெற்றோருக்கு உதவும் எனத் தெரிவிக்கப்படுகிது.

லொய்க் செசோட்டினாலும் மைக்ரோசொப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் முன்னாள் அதிகாரியான தோமஸ் சேர்வலினால் இந்த திட்டத்துக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது.

இப்பற்தூரிகையை இந்த வருட இறுதியில் உலகளாவிய ரீதியில் சந்தைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் ஆரம்ப விலை 99 முதல் 200 டொலர்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments