Subscribe Us

header ads

கல்முனையில் ஜனாஸா தோண்டியெடுப்பு (படங்கள் இணைப்பு)


(யு.எம்.இஸ்ஹாக்)



கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  கல்முனை குடியில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா ஒன்று இன்று 02.01.2014  சந்தேகத்தின் பேரில் கல்முனை பொலிசாரினால் தோண்டி எடுக்கப்பட்டது.

கல்முனை குடி 11 காசிம் வீதியில்  வசித்த  18 வயதுடைய முகம்மது ஹனிபா அஸ்ரின் என்ற யுவதி  2013.07.13 அன்று மரணமாகி  அன்றைய தினம்  பிற்பகல் கல்முனைக் குடி நூறாணியா மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த மரணம் இயற்கை மரணம் அல்லவென்றும் கொலை செய்யப்பட்டு  அடக்கம் செய்யபட்டதாகவும் தெரிவித்து ஜனாதிபதி,பாதுகாப்பு செயலாளர் ,பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தொடர்ந்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து  இவ்விடயத்தை விசாரிக்க கல்முனை பொலிசார் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியை பெற்று நீதிபதி அன்டன் டூச்சன் அவர்களின்  உத்தரவுக்கமைய  அவரது  முன்னிலையில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார், சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் வை.எல்.யூசுப், மற்றும் கிராமசேவகர் ஆகியோரின் சாட்சியுடன்  இன்று (02) காலை 10.00 மணிக்கு  இந்த ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டு வைத்திய அறிக்கைக்கு  அம்பாறை ஆதார வைத்திய சாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெருந் திரளான மக்கள் மையவாடியைச் சுற்றி கவலையோடு நின்றிருந்தனர். JM


Post a Comment

0 Comments