கடந்த வருடத்தில் மாத்திரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.15 கோடிக்கு அதிகம் பெறுமதியான தங்கம்
மீட்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் தங்கம் தொடர்பில் 93 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக
சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
அதன்போது 24 கிலோ 800 கிராம் தங்கம் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வருடத்தில் முதல் சம்பவமாக 22 மில்லின் பெறுமதியான தங்கத்தை சென்னைக்கு
கடத்தவிருந்த பம்பலபிட்டியைச் சேர்ந்த நபர் இன்று (01) காலை கைது
செய்யப்பட்டுள்ளதாக லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
அத தெரண

0 Comments