ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறி 2 வருடங்கள்
ஆகியுள்ள நிலையில் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டு 10 000 பொதுமக்கள் கொல்லப்
பட்ட வன்முறைகளை அடுத்து ஒரே நாளில் அதிகளவு மக்கள் கொல்லப் பட்ட
வன்முறையாக ஈராக்கில் இன்று நடைபெற்ற வன்முறைகள் கருதப் படுகின்றன.
அதாவது ஈராக்கின் பல்வேறு இடங்களில் இன்று இடம்பெற்ற குண்டுத்
தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் 75 பேர் இன்று
பலியாகியுள்ளனர். முதல் தாக்குதல் சுன்னி முஸ்லிம் பிரிவினரின் மரணச்
சடங்கில் இடம்பெற்ற குண்டு வெடிப்பாகும். இதில் பக்குபா நகருக்குத் தெற்கே
உள்ள ஷட்டுப் கிராமத்தில் 18 மக்கள் கொல்லப் பட்டும் 16 பேர் காயமடைந்தும்
உள்ளனர். அடுத்த தாக்குதல் இராணுவப் பாசறையின் அருகே உள்ள பாலத்தில் வீதி
ஓரமாக வெடிக்கச் செய்யப் பட்ட குண்டு மூலம் நிகழ்த்தப்பட்டது. இதில் 6
படையினர் கொல்லப் பட்டும் 8 பேர் காயமடைந்தும் உள்ளனர். இன்னுமொரு
தாக்குதலில் பக்தாத்திற்கு கிழக்கே மூன்று டிரக் வண்டிகளைக் கைப்பற்றிப்
போராளிகள் தீயிட்டதுடன் 7 ஓட்டுனர்களைச் சுட்டுக் கொன்றும் உள்ளனர்.
இதைவிட தலைநகரில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலங்களில்
குறைந்தது 8 குண்டுகள் வெடித்ததுடன் அதில் 40 பேர் கொல்லப் பட்டும் 88
பேர் காயமடைந்தும் உள்ளனர். ஈராக்கில் எல்லை மீறி இவ்வாறு தொடரும்
தாக்குதல்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் தோன்றியுள்ளதால் அந்நாட்டின்
பிரதமர் மாலிக்கி தொலைக்காட்சியில் பேட்டியளிக்கையில் இவற்றைத் தடுப்பதற்கு
உலக நாடுகளின் உதவியைக் கோரியுள்ளார். ஈராக்கில் இவ்வாறு மேற்கொள்ளப்
படும் தாக்குதல்களில் பல அங்கு ஷியா முஸ்லிம் பிரிவினரின் ஆட்சிக்கு எதிராக
செயற்பட்டு வரும் அல்-கொய்தா தீவிரவாதிகளால் முன்னெடுக்கப் பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது.
0 Comments