Subscribe Us

header ads

அமெரிக்க தூதர் ஒருவர் 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்:மத்திய அரசு

அமெரிக்க தூதர் ஒருவர் இந்தியாவை விட்டு 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
 
இந்திய துணைத் தூதர் தேவயானி கொப்ரகடேவை அமெரிக்க அரசு நாட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க தூதர் ஒருவரை நாட்டை விட்டு 48 மணி நேரத்துக்குள் வெளியேற கெடு விதித்து உள்ளது மத்திய அரசு.
 
இந்தியாவின் இந்த செயல்பாடு மிகவும் வருத்தம் அளிப்பதாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் இருநாட்டு விரிசலை சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும், தேவயானி சட்ட பாதுகாப்பை தற்போது இழந்துள்ளதால் அவர் நியூயார்க் வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் அமெரிக்க காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Post a Comment

0 Comments