முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 111 இந்திய
மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று
(17) உத்தரவிட்டது. தமிழகம், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 111 மீனவர்களும் கடந்த டிசெம்பர் 11ஆம் திகதி 15 படகுகளில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இம்மீனவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

0 Comments