Subscribe Us

header ads

ஹொலிவூட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய போல் வோகரின் திடீர் மரணம்

பாஸ்ட் அன்ட் பியூரியஸ் (Fast & Furias) திரைப்படத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற   ஹொலிவூட் நடிகர் போல் வோகர்,  தனது 40 வயதில்  நேற்றுமுன்தினம் கார் விபத்தில் மரணமடைந்தமை ஹொலிவூட் திரையுலகினரையும் உலகெங்குமுள்ள அவரின் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாஸ்ட் அன்ட் பியூரியஸ் திரைப்படங்கள் வேகமான காரோட்டக் காட்சிகளுக்குப் பிரசித்தமானவை. ஆனால், போல் வோகரின் நிஜ வாழ்வில் அவரின் மரணத்துக்கும் வேகமான  காரோட்டமே காரணமாகியுள்ளது.


பிலிப்பைன்ஸில் ஹையான் சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நிதிசேகரிப்பு நிகழ்வொன்றில் பங்குபற்றிவிட்டு தனது நண்பர் ரோஜர் ரொடாஸ் ஆடம்பர காரில் பயணம் செய்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


இவ்விபத்தின் போது போல் வோல்கர் காரை ஓட்டிச் செல்லவில்லை. அவரது நண்பர் ரோஜர் ரொடாஸ்தான் வாகனத்தை செலுத்தியுள்ளார்.


இக்காரை செலுத்திய ரோஜர் ரொடாஸ்சாதாரண சாரதியல்ல. இவர் முன்னாள் காரோட்ட பந்தய சாரதியாவார். பின்னர் நடிகர் போல் வோகரின் நிதி ஆலோசகராக பணியாற்றத் தொடங்கினார்.


கார்களிலும் காரோட்டங்களிலும் நன்கு பரீட்சயமான இவ்விருவரும் எதிர்பாரத வீதி விபத்தில் இறந்தமையை பலர் நம்பமுடியாமல் தவிக்கின்றனர்.


ரோஜர் வோக்கர் செலுத்திச் சென்ற கார்  கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதுண்டு பின்னர் சிறிய மரமெவர்னறில் மோதியுள்ளது.


அதையடுத்து மூண்ட பெரும் தீ, அந்த ஆடம்பரக் காரை உருத்தெரியாமல் எரித்தது. நிதிசேகரிப்பு வைபவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில்தான் இந்தவிபத்து இடம்பெற்றது.


இவ்வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் மற்றும் அயலவர்களும் தீயை அணைப்பதற்காக ஓடிவந்தபோதிலும் பலன்கிட்டவில்லை.

போல் வோகரும் அவரின் நண்பர் ரோஜர் ரொடாஸும் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டபோதிலும் அவர்கள் இருவரின் சடலங்களையும் சரியாக அடையாளம் காண்பதற்கு பல நாட்கள் செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்தளவு அவர்களின் சடலங்கள் எரிந்துள்ளன.


போல் வோகர் 1973ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி அமெரிக்காவின் கார்லிபோர்னியா மாநிலத்;தில் க்லென்டேல் எனுமிடத்தில் பிறந்தார். தனது இளமைப் பருவத்தில் பெஷன் மொடலாகவும் தொலைக்காட்சி தொடர் நடிகராகவும் இருந்த போல் வோகர் 1985ஆம் ஆண்டு மொன்ஸ்டர் இன் த க்ளோஸட் திரைப்படத்தின் மூலம் ஹொலிவூட்டில் அறிமுகமானார்.


இறக்கும் வரையில் தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாஸ்ட் அன்ட் பியூரியஸ் பாகம் 7 மற்றும் விரைவில் வெளிவரவுள்ள பிரிக் மென்ஸன் ஆகிய படங்களுடன் சேர்த்து மொத்தமாக 31 படங்களில் நடித்துள்ளார். அத்துடன் 11 தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

1999ஆம் ஆண்டு வெளியான வார்ஸிடி ப்ளுஸ் திரைப்படத்தின் பாரிய வெற்றிக்குப் பின்னர் பிரபல்யல்யமடைந் போல் வோகர் பாஸ்ட் என்ட் பியூரியஸ் திரைப்பத்தின் பாகங்களில் பிரைன் ஒ கோனர் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கொள்ளைகொண்டார். இத்தொடரில் 7 பாகங்களில் 6 இல் வின் டீஸலுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்துக்காக இவர் இரு விருதுகளையும் வென்றுள்ளார்.


திருமணம் செய்துகொள்ளாத போல் வோகர் தனது ஒரு நாள் காதலி ரெபேக்கா மூலம் மிடொவ் வோகர் (15 வயது) எனும் பெண் குழந்தைக்கு தந்தையானார்.

கார் பிரியரான போல் வேர்கள் பல்வேறு வகையான காரோட்டப் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார். கடல்சார் உயிரியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார் வோகர். நெஷனல் ஜோக்ரெபி சனல் தொடரில் பங்குபற்று தனது நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்தார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டார். ஹெய்டியில் 2010இல் இடம்பெற்ற பூமியதிர்சியின் போது பல்வேறு உதவி புரிந்தார்.

இவரின் மரணத்துக்கு ஹொலிவூட் நட்சத்திரங்கள் பலரும் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments