இலங்கை-–பாகிஸ்தான்
அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது
போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்
மேற்கொண்டுள்ள இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் 2 இருபது-20, 5
ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதுகின்றன.
இந்நிலையில், இருபது-20 தொடர் 1–-1 என சமநிலையில் முடிவடைந்துள்ள
நிலையில் இன்று இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர்
ஆரம்பமாகின்றது. அந்தவகையில் ஷார்ஜாவில் இன்று இரு அணிகளும்
தொடரின் முதலாவது போட்டியில் மோதுகின்றன.
மத்தியூஸ் தலைமையில் களமிறங்கும் இலங்கை அணியும் மிஸ்பா உல் ஹக்
தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியும் இதுவரையில் 132 ஒருநாள்
போட்டியில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 77 போட்டிகளிலும் இலங்கை 50
போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி சமநிலையிலும் 4
போட்டிகள் முடிவு பெறப்படாதும் நிறைவு கண்டுள்ளன.


0 Comments