இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள்தலைவர்கள் அமர்வு குறித்து பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபெத் கருத்து வெளியிட்டுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவினாலும் அவர்களுக்கு இடையிலான பிணைப்பில் மாற்றம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், நட்பு ரீதியில் அவை அணுகப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிலாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

0 Comments