Subscribe Us

header ads

கற்பிட்டியில் அதிகரித்து வரும் கட்டார் மாப்பிள்ளைகளின் கிராக்கி...

”கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்” என்பார்கள் முன்னோர்கள்.
எமது கற்பிட்டி பிரதேசத்தில் காலத்திற்கு காலம் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. 

 அந்த மாற்றங்களின் தொடராக இப்பொழுது இன்னுமொரு கலாச்சாரம் நம் மத்தியில் பரவ ஆரம்பித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் அதாவது கட்டார்சவூதிகுவைத், துபாய் போன்ற நாடுகளில் இரண்டுவருடம் கழித்துவிட்டு வந்தால் போதும் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு வரும் கலாச்சாரம் நம் பிரதேசத்தில்  பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது.
அவர் என்ன வேலை செய்து விட்டு வந்தாலும் சரி என்ன நிலையில் இருந்தாலும் சரி உடனே ஊரில் உள்ள (மாமா மார்) தரகர்கள் ஒருமுறை வாசற் கதவை தட்டித்தான் பார்க்கிறார்கள். அதிலும் கட்டார் , துபாய் என்றால் அந்த வீதியிலே வாடி அடிக்கிறார்களாம் அந்த அளவுக்கு மௌசு ஏறிவிட்டது இந்த வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு!

ஒரு பத்து ஐந்து வருடங்களுக்கு முன் நம் ஊரில் லண்டன் மாப்பிள்ளை தான் பெசன். இப்போது அது குறைந்து விட்டது போல்.

 “கல்யாண வயசுல தான் நானும் இருக்கிறேன். எங்க வீட்டுல இன்னும் கல்யாணப் பேச்சு வார்த்தையே இல்லையே. நானும் சம்பாதிக்கிறேன் தான். நானும் ஏதோ ஒரு வகையில் நல்ல பொடியனாத்தான் இருக்கிறேன்” என்று ஏங்கித் தவிக்கும் உள்ளூரில் தொழில் புரியும் ஒரு பட்டாளம்.

“அதுக்குதான் ஒரு வழி இருக்கு. ஒரு எட்டு வெளிநாட்டுக்கு போய் வந்தால் பிரச்சினை தீர்ந்தது. நீங்களும் ஒரு கட்டார் மாப்பிள்ளையாகசவூதி மாப்பிள்ளையாகதுபாய் மாப்பிள்ளையாக ஆகலாம்.” விசா ரெடி பண்ணுவோமா???
முன்னர் ஒரு காலம் இருந்தது அரசாங்க உத்தியோகம் புரிவோருக்குத்தான் பெண் கொடுப்போம் என்று “கோழி துரத்தும் வேலையாயினும் சரி அது கவர்மன்ட் வேலயாகனும்” என்று சொல்லி வந்த காலம் போய்விட்டது. இதை நம்பி படிச்சி அரசாங்க உத்தியோகம் எடுத்த நம்ம கூட்டாளிமாரெல்லாம் அல் அக்ஸா சந்தியிலும், காட்டுபாவா பள்ளி சந்தியிலும் நின்று பெருமூச்சு விட்டது தான் மிச்சம்.

அதனால்தான் எல்லோரும் கட்டார்சவூதிதுபாய், குவைத் என்று நாட்டை விட்டுட்டு பறக்கிறார்களோ என்று யோசிக்கத் தோணுது. கல்யாணம் முடிக்கிறதுக்கும் கொலிபிகேசன் வேணும் அதுதான் கட்டார் மாப்பிள்ளைசவூதி மாப்பிள்ளைதுபாய், குவைத் மாப்பிள்ளை. நல்லாத் தான் போகுது.  நல்ல காலம் நம்ம பசங்க சோமாலியாவுக்கு  போகல போங்க!

நன்றி: அபு சிம் ஆ மற்றும் PTPV( கருப்பொருள்), 
ASM. ஹானான் ( கற்பிட்டி தகவல்)


Post a Comment

2 Comments

  1. unmai sambavam thidukidum seithi................vera vela irunthal paaruga........funny dont be serious guys...........

    ReplyDelete
  2. Enna Pa Siraji ungala paathichittu pola mela ulla news

    ReplyDelete