அதிக எண்ணிக்கையிலான மலாவி கிறிஸ்தவர்கள் தற்போது ஹலால் உணவை பாவிக்க ஆரம்பி
விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புனித பைபிள் கண்டிப்பாக வலியுறுத்தும், ஆரோக்கிய
வாழ்வுக்கு அவசியமான சுகாதார தரத்தை இஸ்லாம் வலியுறுத்தும் ஹலால் உணவு பொதிந்துள்ளது
எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும் முஸ்லிம்
உட்பத்திகளுக்கென அங்கே தனிப்பட்ட சந்தை ஒன்றும் திறக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்
படுகிறது.
மலாவி நாட்டின் தெற்கு பகுதியில் இயங்கி வரும் ஆங்கிலிகன் தேவாலயத்தின் மூத்த பாஸ்டர்
பர்னபா சலாகா “ஒன் இஸ்லாம்” இணையத்திற்கு இது பற்றி கருத்து தெரிவிக்கையில்,
கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம் என
குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
கிறிஸ்தவர்களை ஆதிக்கம் செலுத்தி அவர்களை மதம் மாற்றுவதற்காக முஸ்லிம்கள்
திட்டமிட்டு மேற்கொண்டுள்ள தந்திரோபாயமே இந்த ஹலால் உணவு திட்டம் என கருதியதால்
நாம் ஆரம்பத்தில் இந்த கருத்தை அங்கீகரிக்க மிகவும் தயங்கினோம். எனினும், காலங்கள்
கடந்தபோதே இந்த ஹலால் உணவை பயன்படுத்துவது உடல் நலம் மற்றும் மத ரீதியாகவும் எமது
சொந்த நலனுக்கு மிகவும் பொருத்தமானது என்ற உண்மையை புரிந்து கொண்டோம். பைபிளில்
கூட ஆரோக்கிய வாழ்வுக்காக இது மாதிரியான சுகாதார தரத்தை உடைய உணவுகளை
உட்கொள்ளுமாறு வலியுறுத்தும் போதனைகள் உள்ளன. எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய காலங்களில் “ஹலால் உணவு ஆரோக்கியமானது’ என்ற கருத்தை மலாவி கிறிஸ்தவ
தலைவர்கள் உட்பட கிறிஸ்தவர்கள் அனைவரும் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளமையினால், கிரிஸ்தவர்கள்
பெரும்பான்மையாக வாழும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் முஸ்லிம் சமூகம் ஊக்குவிக்கும் ஹலால்
உணவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.
மன சாட்சி உள்ள எந்தவொரு உண்மை கிறிஸ்தவரும் “ஹலால்” என்பது பைபிள்
வலியுறுத்தும் ஒன்றே என்பதை ஏற்றுக் கொள்வர் எனவும் பாஸ்டர் பர்னபா சலாகா அதன்போது
குறிப்பிட்டார்.
அவரது சகாவும், Pure Gospel Church ன் நிறுவனரும்,
மேற்பார்வையாளருமான பாஸ்டர் இம்மானுவல் ம்பைசா பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
“முஸ்லிம்களின் ஹலால் உணவு திட்டமானது சிறந்த சுகாதார தரம் வாய்ந்த நல்ல
உணவுகளை ஊக்குவிக்குகிறது. இந்த அம்சம் தான் முஸ்லிம் அல்லாதோர் மத்தியிலும்
தாக்கம் செலுத்தி அவர்களையும் இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கத் தூண்டுகிறது. இஸ்லாம்
என்பது முழுமையான வாழ்வு நெறி என்பதை எடுத்துக் காட்டும் பகுதிகளில் இதுவும்
ஒன்றாகும்”.
“ஒரு தேவாலய தலைவர் என்ற வகையில், அதன் ஆரோக்கிய வாழ்வுக்கு
அவசியமான அணுகுமுறை காரணமாக நான் இந்த கருத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன். மேலும், நான்
எண்ணப் பின்பற்றுகிறவர்களையும் ஹலால் கொள்கை வலியுறுத்தும் ஆரோக்கிய வாழ்வுக்கு
அவசியமான சிறந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு முன்னணியில் நின்று ஊக்கம் அளித்து வருகிறேன்”.


0 Comments