Subscribe Us

header ads

அப்ரிடியின் அதிரடியால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ருவென்டி ருவென்டி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. 

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஏஞ்சலோ மெத்திவ்ஸின் அதிரடி அரைச்சதத்துடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் மெத்திவ்ஸ் 50 ஓட்டங்களைப் பெற்றார். 

பதிலுக்கு 146 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்களால் வெற்றியடைந்தது. 

பாகிஸ்தான் சார்பில் அப்ரிடி, சர்ஜீல்கான், ஹபீஸ் ஆகியோர் முறையே 39,34,32 ஓட்டங்களைப் பெற்றனர். 

ஆட்ட நாயகன் விருதை அப்ரிடி பெற்றுக் கொண்டார்.  

Post a Comment

0 Comments