சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாதிக்கப்பட்டுள்ள குளிரூட்டல் ஸ்பேஸ் வால்க்ஸ் (space walks) எனப்படும் விண்வெளியில் இறங்கி நடக்கும் தொடர் பயணங்களின் முதல் நடைபயணத்தை விண்வெளி வீரர்கள் மேற்கொள்கின்றனர்.
சேதமடைந்த வால்வு காணப்படும் குழாய் ஒன்றை துண்டிப்பதற்காக இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்துக்கு வெளியில் சென்றுள்ளனர்.
குறித்த
குழாயை அகற்றிவிட்டு புதிய குழாயொன்றை பொருத்துவதற்காக மேலும் இரண்டு
ஆய்வுப் பயணங்களை மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
10 நாட்களுக்கு முன்னர் இந்த பாதிப்பு ஏற்பட்ட நிலையில், விண்வெளி வீரர்கள் மிக அவசியமற்ற கருவிகளை நிறுத்திவைத்துவிட்டனர்.
அதனால் விஞ்ஞான ஆய்வுகளும் கிட்டத்தட்ட நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இப்போது
ஏற்பட்டுள்ள நிலைமை பாரதூரமானது என்றாலும் உயிராபத்து ஏற்படுத்தக்கூடியது
அல்ல என்று நாசா கூறியுள்ளது.

0 Comments