மத்திய ஆப்பிரிக்க குடியரசில் வாழும் முஸ்லிம்கள் மீது தொடர்ந்தும் ஆயுதம்
தரித்த கிறிஸ்தவ பயங்கரவாத குழுக்கள் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடாத்தி
வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறஸ்தவ போராளிகள் பல
முஸ்லிம்களின் வீடுகளையும், பள்ளிவாயல்களையும் அழித்து போஹ் பிரதேசத்தில் பதற்ற
நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம்
அப்பிரதேசத்தில் பெருமளவிலான முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளதாக பிரதேச
வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மாத்திரம் சுமார் 108 க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்
பட்டுள்ளதாக போஹ் பள்ளிவாயல்கள் சங்கத்தின் தலைவர் யஹ்யா அபூ பக்ர்
தெரிவிக்கின்றார். மேலும் அக் கிறிஸ்தவ போராளிக் குழுக்கள் சிறுவர்கள், பெண்கள்,
கர்ப்பிணிகள், என பாராது முஸ்லிம்கள் அனைவரையும் கொடூரமாக கொன்று குவிக்கும்
அதேவேளை பலியான சடலங்களை வெட்டி, சேதப் படுத்தி மிருகத்தனமான அவர்களின் அட்டூழியங்களை
அரங்கேற்றி வருகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ பயங்கரவாத கும்பல் தனது நான்கு குழந்தைகள் உட்பட பெற்றோர்களையும் படுகொலை
செய்து விட்டதாக குறித்த பிரதேசத்தில் வசித்து வரும் சல்மா என்ற முஸ்லிம் பெண்மணி தெரிவிக்கின்றார்.


0 Comments