Subscribe Us

மனைவி குவைத்துக்குச் சென்று நாடு திரும்பாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட கணவன்

பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்றுள்ள தனது மனைவி மூன்று வருடகாலம்கடந்தும் நாடுதிரும்பாத காரணத்தால் கணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்றுகொபெய்கணே பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நெலஹர என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

42 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

தற்கொலை செய்துகொண்டவரின் மாமனார் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் உயிரிழந்தவர்தனது மருமகனென்றும் தனது மகள் குவைத் நாட்டுக்குச் சென்று மூன்று வருடங்கள் கடந்தும்நாடு திரும்பாததையடுத்து விரக்தியடைந்து காணப்பட்டார். மனைவியின்றி வாழ்வதால்பலனில்லையென்றும் மனைவியை திருப்பி அழைக்கும்படியும் தம்மை நச்சரித்ததாகவும், இதுகுறித்து மகளுக்கு தெரிவித்தும் அவர் திரும்பி வராதததால் விரக்தியுற்று மருமகன்தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட கொபெய்கணே வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்மெரில் ரஞ்சித், விஷமருந்தியதால் ஏற்பட்ட மரணம் என அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments