Subscribe Us

header ads

நோயாளியை செத்துப் போ என்று கூறியது கடிகாரம்....

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளியை பார்த்து கடிகாரம் செத்துப் போ என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்தின் யார்க்ஷயரில் உள்ள ஷெப்பீல்டில் ராயல் ஹாலம்ஷயர் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரை பார்த்து, கடந்த 10ம் திகதி(செவ்வாய்கிழமை) செத்துப் போ என்று கூறியுள்ளது.

மருத்துவமனை சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஜெர்மன் கடிகாரம் செத்துப்போ என்று கூறியதை நாங்களும் கேட்டோம் என்று ஸ்டூவர்ட் கார்டர் மற்றும் பியோனா பாத்ராப் ஆகிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டயன்ஸ்டாக் என்றால் ஜெர்மானிய மொழியில் செவ்வாய்கிழமை என்று அர்த்தம், அதன் சுருக்கத்தை தான் அந்த கடிகாரம் டை என்று தெரிவித்துள்ளது.

இதன் பிறகு கடிகாரம் ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டது என்று அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர், ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்ட பிறகு கடிகாரம் ட்யூ என்று தெரிவித்துள்ளது. அதாவது ட்யூஸ்டே(செவ்வாய்கிழமை) என்பதன் சுருக்கமாகும்.

Post a Comment

0 Comments