Subscribe Us

header ads

எங்கள் சமூகத்தில் இப்படி ஒரு குழந்தை உண்டா? அறிவில் அயன்ஸ்டீன், பில்கேட்சுக்கு சவால்விடும் 4 வயது சிறுவன் (படங்கள்,வீடியே இணைப்பு)

பிரிட்டனில் செர்வின் என்ற 4 வயது சிறுவன் வியக்கும் வகையில் நவீன நுண்ணறிவை பெற்று சிறு வயதிலேயே சாதனையாளராக உருவெடுத்துள்ளான்.

இச்சிறுவன் 10 மாதத்திலேயே பல வார்த்தைகளை பேச கற்றுக்கொண்டதுடன், இரண்டு வயது முதல் உலகிலுள்ள நாடுகளின் பெயர்களை கற்றுக்கொண்டான்.

பின்பு உடலில் எல்லா பாகங்களும் அவற்றின் வேலைபாடுகளையும் மிகச் சரியாக கூற தொடங்கினான். இதனை தொடர்ந்து எரிமலையையும், எரியும் நட்சத்திரங்களை பற்றிய தகவல்களையும் நன்கு விளக்குகிறான் மற்றும் கணிதத்தில் வெகு விரைவாக செயல்படுகிறான்.

இச்சிறுவன் தன் 3 வயதில் தன் திறமைகளை வெளிப்படுத்தி பள்ளியில் சிறந்த மாணவன் திகழ்வதுடன், 4 வயதில் IQ தேர்வில் 160 மதிபெண்களை பெற்று சாதனைப் படைத்துள்ளான்.

இதுகுறித்து இவன் தாயார் கூறுகையில், செர்வின் எப்போதும் மகிழ்ச்சியுடன் தான் பேசிக்கொண்டிருப்பான். நான் செய்யும் அனைத்து வேலைகளையும் கேட்டு தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவான்.

இவன் இதுவரை 940 புத்தங்களை படித்துள்ளான், இதில் இவனுக்கு படித்ததில் பிடித்தது என்ஸைக்லோ பீடியா தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சிறுவனின் புத்திகூர்மையும், ஈடில்லா சாதனையும் பில்கேட்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற பிரபலாமான திறமையாளர்களுக்கு நிகராக ஒப்பிடப்படுகிறது.

Post a Comment

0 Comments