Subscribe Us

header ads

பௌத்த நாட்டில் முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ அல்லது உயிர்பலிக்கோ இடமில்லை - பொதுபலசேனா

உயிர்ப்பலி கொடுப்பவர்கள் புண்ணியம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. பௌத்த நாட்டில்  முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ அல்லது உயிர்பலிக்கோ இடமில்லை என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இயங்கி வரும் முஸ்லிம் அமைப்புக்களின் பின்னணியில் சவூதி அரேபியாவின் முக்கிய தீவிரவாதிகள் இருக்கின்றனர். பௌத்த கொள்கைகளை சீரழித்து மத்திய கிழக்கு நாடுகளைப் போல் இலங்கையையும் மாற்ற முயற்சிக்கின்றனர் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,

மதம் என்ற போர்வையில் நாட்டில் உயிர்ப்பலிகளை கொடுக்கின்றனர். முஸ்லிம் மக்களின் விழாக்களில் அவர்களின் மதத்திற்கு ஏற்ப இவை செய்யப்பட்டாலும் அதை புண்ணியம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. புண்ணியம் என்பது பௌத்த தர்மத்தின் மூல மந்திரம். இந்த வசனத்தை உயிர் பலி  கொடுக்கும் விடயங்களில் பயன்படுத்தக்கூடாது.

இலங்கை சிங்கள பௌத்த நாடு இங்கு பௌத்த தர்மத்தின்படியே ஆட்சி நடத்த வேண்டும். சிங்கள, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் முஸ்லிம்களின் கொள்கைகளை பரப்பி எமது மதத்தையும் பௌத்த தர்மத்தினையும் கொச்சைப்படுத்தக் கூடாது.

எனவே அரசாங்கம் இவற்றினை கவனத்தில் கொள்ளாது விட்டால் நாம் அனைத்தையும் அழிக்க நேரிடும். நாம் பௌத்த அமைப்பாக இருந்தாலும் நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராக எவையேனும் இடம்பெற்றால் அவற்றினை தட்டிக்கேட்கும் அதிகாரம் எமக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments