எனது பெயர் காஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனது குடும்பத்தின் வறுமை காரணமாக 2000 ஆம் ஆண்டில் வத்தளையில் தனியார் ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். வத்தளையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியே தொழிலுக்குச் சென்றேன். அவ்விடுதி நான் வேலை செய்த ஆடைத் தொழிற்சாலையில் கட்டுப்பாட்டிலேயே செயற்பட்டது.
அங்கு தொழில் செய்து வருகையில் என்னோடு தொழில் புரிந்து வந்த ஓர் இளைஞனோடு காதல் மலர்ந்தது. நாளடைவில் இருவரின் காதலும் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இரு வீட்டாரும் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதித்தனர். ஆனால் எனது காதலரான சுனிலின் அண்ணனது திருமணம் முடியும்வரை பொறுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இருவரும் பொறுமையைக் கை கொண்டோம்.
2003 ஆம் ஆண்டு சுனிலுக்கு திடீரென கடுமையான சுகவீனம் ஏற்பட்டது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்த்து சுகம் விசாரிக்க நானும் எனது பெற்றோரும் தேசிய வைத்தியசாலைக்கு சென்று வருவோம். அவரின் பெற்றோரும் வைத்தியசாலைக்கு வருவார்கள். சுமார் இரண்டு மாதங்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு என்ன நோய், ஏன் அவதிப்படுகிறார் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது.
அவரின் பெற்றோருக்கு சுனிலை தாக்கும் நோய் எதுவென வைத்தியர்கள் கூறியுள்ளனர். ஆனால் சுனிலும் அவரின் பெற்றோரும் எனக்கு திரைப் போட்டு விட்டனர்.

வைத்தியசாலையை விட்டு வெளிவந்ததும் சுனில் மீண்டும் தொழிற்சாலைக்கு வந்தார். மீண்டும் இரண்டு மாதத்தின் பின்னர் தொழிலுக்கு வராது நின்றுவிட்டார். என்னிடமும் சொல்லவில்லை. எனக்கு அவர் வராமைக்கான காரணம் தெரியாது தடுமாறினேன்.
என்னுடன் இருந்த தொடர்பையும் முறித்துக் கொண்டார். அவரின் பெற்றோரிடம் விபரம் கேட்டேன். அவர் நுவரெலியாவில் இருப்பதாக பொய் கூறினார். பின்னர் ஒரு நாள் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்தனர். அங்கும் சென்று அவரை பார்த்தேன். அவர் பேசும் சக்தியையும் இழந்து துன்பத்துடன் காணப்பட்டார். இரண்டு நாட்களின் பின்னர் அவரின் மரணச் செய்தி எனக்கு தகவலாக கிடைத்தது.
இது 2003 ஆம் ஆண்டு நடந்தது. மரண வீட்டுக்கு சென்று அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அப்போதும் அவருக்கான நோய் பற்றிய தகவல் எனக்குக் கிடைக்கவில்லை. எனது கனவுகள் நிலத்தில் வீழ்ந்த மண் பானையாக மாறின. சோகத்தை சுமந்தவாறு வத்தளைக்கு வந்துவிட்டேன்.

2004 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் நானும் சுகவீனம் அடைந்தேன். கடுமையான காய்ச்சல் என்னைத் தொற்றிக் கொண்டது. எனது விடுதி மேற்பார்வையாளரான மெடம் என்னை திடீரென வத்தளையிலுள்ள தனியார் வைத்தியலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டரிடம் மெடம் தனியாக வெகுநேரம் கதைத்தார். பின்னர் என்னை உள்ளே அழைத்தார் டாக்டர். எனது குருதி மாதிரியை பெற்றார். நான் அதிர்ந்துவிட்டேன்.
சில நாட்களின் பின்னர் எனக்குள் எயிட்ஸ் நோய் இருப்பதாக தெரிவித்தனர். என் மீது மெடத்திற்கு சந்தேகம் வரக் காரணம், சுனிலும் மெடமும் ஒரே ஊர். மெடம் சுனிலை எயிட்ஸ் நோய் தாக்கியது என்பதை அவரின் தந்தை மூலம் இரகசியமாக தெரிந்து கொண்டுள்ளார்.
இதை அறிந்ததும் நான் தற்கொலை செய்துகொள்ள எண்ணினேன். இதன் பின்னர் தொழிற்சாலை முகாமையாளருக்கு விடுதி மெடம் எனது நிலையை தெரிவித்து விட்டார். இப்போது சுனில் மூலம் எனக்கு எயிட்ஸ் அல்ல. எச்.ஐ.வி. வைரஸ் உள்ளதாக டாக்டர் மூலம் தெரிந்து கொண்டேன். முகாமையாளர் எனக்கு தொழில் செய்ய இயலாது எனவும் சுயவிருப்பத்தின் நிமித்தம் விலகுவதாகவும் கடிதம் எழுதி பெற்றுக் கொண்டு என்னை எனது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
உண்மையிலேயே மனிதர்களிடம் மன வலிமை கொண்டவர்களால்தான் மற்றவர்கள் மீது அன்பு செலுத்த முடியும். அவ்வாறான மன வலிமை கொண்டவர்கள் தான் எனது விடுதி மெடமும் தொழிற்சாலை முகாமையாளரும் என்னை எச்.ஐ.வி. தாக்கியதை இவ்விருவரும் எவரிடமும் சொல்லவில்லை. என்னை தைரியப்படுத்தினார்கள். அவர்களும் என்னோடு இணைந்து அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும் எனக்கு தெய்வமாக காட்சிக் கொடுத்தார்கள்.
வீட்டுக்கு வந்தன். மூட்டை முடிச்சுக்களுடன் அத்துடன் எச்.ஐ.வி. தொற்றையும் சுமந்தவாறு செத்துப் பிழைத்து பிழைத்து வாழும் நிலையில். எனது அம்மா இறந்துவிட்டார்.
அண்ணனிடம் உன்னை விடுதி மெடம் அழைத்து வரச் சொன்னார்கள் என்றேன். மறுநாள் ஊரிலிருந்து நானும் அண்ணனும் வத்தளை விடுதிக்குச் சென்றோம். விடுதி மெடம் எங்களை புன்னகையோடு வரவேற்றார். விபரத்தை மெதுவாக அன்போடு அண்ணனிடம் தெரிவித்தார்.

எனது அண்ணன் உடைந்து போனார். மெடம் அண்ணனை தைரியப்படுத்தி உணவும் கொடுத்து எனக்கு பணமும் உடைகளும் கொடுத்து அனுப்பி வைத்தார். 2004 முதல் 2008 வரை ஊரிலேயே வாழ்ந்தேன். கொழும்பு பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பெரும் மன உளைச்சல் என்னை வாட்டியது. எனக்கு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கினர்.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு என்னை மீண்டும் காய்ச்சல் தாக்கியது. மாகாண அரச மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு வார்ட்டில் தங்கி சிகிச்சைப் பெற வார்ட்டில் தங்க வைக்கப்பட்டேன். வார்ட் வைத்தியரிடம் எனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக தெரிவித்தேன். இதனால் இரண்டு நாட்களாக எனக்கு எவ்வித சிகிச்சைகளையும் இவ் வைத்தியசாலையில் வழங்கவில்லை. நல்ல மனிதாபிமானம் கொண்ட வைத்தியர் எனக்கு மருந்துகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
இது காலம்வரை எனது கிராமத்துக்குத் தெரியாத என் நோய் விடயம் இவ் வைத்தியசாலையில் உள்ள தாதியொருவர் மூலமாக எனது கிராமத்துக்கு தெரியவந்தது. இவர் எனது கிராமத்தில் திருமணம் முடித்துள்ள தகவல் எனக்குத் தெரியாது போனமையே இத்தகவல் பரவக் காரணமாகும்.
பின்னர் கிராமத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. சொல்ல இயலாத தொல்லைகள். மக்கள் எனக்கெதிராக வெறுப்பைக் கொட்டினார்கள். மனித வெறுப்பு என்பது பலவீனத்தின் அடையாளம். எச்.ஐ.வி. தொற்றினால் 2008 அக்டோபரில் எனது உடலின் நோய் கிருமியை எதிர்க்கும் சக்தி 129 ஆக இருந்தது. இதனால் எச்.ஐ.வி. தொற்றை கட்டுப்படுத்த இயலாது தடுமாறினேன். பின்னர் எச்.ஐ.வி. கட்டுப்பாட்டுக்கான உயர் மருந்து வகைகளை பாவித்ததன் பயனாக உயிர்பிழைத்தேன். இதன் பின்னர் எனது உடல் மெலியத் தொடங்கியது. கிராமத்துக்குப் போக முடியாது தவித்தேன். தொடர்ச்சியாக தங்கி ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தேன்.
இவ் வைத்தியசாலையில் வைத்த பொசிட்டியூவ் வுமன் நெட்வேர்க் அமைப்பின் தலைவி பிரின்ஸி மங்கலிக்காவை டாக்டர்கள் எனக்கு அறிமுகப்படுத்தினர். அவர் எனக்கு தைரியத்தை வழங்கினார். என்னை மீண்டும் இச்சமூகத்துடன் வாழும் பயிற்சியை வழங்கினார். இதன் பின்னர் தொடர்ந்து வாழும் ஆசை எனக்குள் மலர்ந்தது. இப்போது எனது உடல் சாதாரண ஒரு இளம் பெண்ணின் நிலைக்கு வளர்ந்து விட்டது. எனது கிராமத்துக்குப் போகின்றேன். சாதாரண பெண்ணைப் போன்றே எனது கிராமத்தில் நடமாடுகிறேன்.
எயிட்ஸ் என்ற பய மாயை என்னை விட்டு தொலைந்துவிட்டது. இன்று எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றேன். இந்நாட்டின் படையினரின் முகாம்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் இணைந்து இருபதுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு உரைகளை அவர்கள் மத்தியில் நிகழ்த்தியுள்ளேன். இப்போது இவ்வாறு எனது சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறேன் என்றார் காஞ்சனா.
'முப்பது வயதில் வாழ்க்கையை தொலைத்து திருமணம் முடிக்காது உள்ள நீங்கள் இளம் வயதினருக்கு என்ன தகவல்களை வழங்க முற்படுகின்றீர்கள்?' என்று அவரிடம் கேட்டோம்.
'நான் வாழ்க்கையை தொலைக்கவில்லை. அனைத்து மக்களும் பெறும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று வருகின்றேன். எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளை ஏதோ கொலை செய்தவர்களைப் போல பார்க்காதீர்கள். திருமணத்திற்குன் உறவு கொள்ளாதீர்கள். சுனில் எவ்வாறு இவ்வைரஸை பெற்றார் என்பது எனக்கு கடைசிவரை தெரிவிக்கவில்லை. தெரிவிக்கும்நிலையிலும் அவர் அன்று இல்லை.
கையடக்கத் தொலைபேசி, பேஸ்புக், இணையத்தளம் மூலமாக அறிமுகம் இல்லாத எவருடனும் நண்பர்களாகிவிட வேண்டாம். முன்பின் அறிமுகம் அற்றவர்களின் தொடர்பால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு அழுவதில் பயன் இல்லை. இளம் வயதினர் மீது பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இன்று சமுதாயத்தையும் இளம் வயதினரையும் கையடக்க தொலைபேசி சீரழித்து வருகின்றன. நேர்மையாக வாழுங்கள். ஒழுக்க நெறிகளில் பிறழாதீர்கள் என்கிறார் காஞ்சனா. உண்மையியே காஞ்சனா ஒரு இரும்பு பெண்தான். இல்லாவிடின் சமூக சேவையில் ஈடுபட முடியுமா?

0 Comments