சுனாமியில் உயிர் நீத்தவர்களை நினைவு
கூரும் தேசிய பாதுகாப்பு தினமான இன்று 26 ஆம் திகதி காலை 9.25
மணியிலிருந்து 9.27 வரைக்கும் இரண்டு நிமிடங்கள் உணர்பூர்வமாக மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது.
அந்த நேரத்தில் வீதிகளில் பயணித்து
கொண்டிருந்த வாகனங்கள் அந்தந்த இடங்களில் நிறுத்தப்பட்டதுடன் பாதசாரிகளும்
அதே இடத்திலிருந்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை உட்பட ஆசியா கண்டத்தின் பல்வேறு
நாடுகளில் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைப்
பலியெடுத்ததுடன் விலைமதிக்க முடியாத உடைமைகளையும் அழித்தொழித்த சுனாமி
அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் ஒன்பது வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
சுனாமியைப் போன்றே அனைத்து விதமான
இயற்கை அனர்த்தங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும்
முன்னேற்பாடும் ஏற்பட வேண்டுமென்பதற்கே இன்றைய தினத்தை தேசிய பாதுகாப்பு
தினமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

0 Comments