Subscribe Us

header ads

பங்களாதேஷில் தூக்கிலிடப்பட்ட முல்லா அவர்களின் இறுதி வார்த்தைகள்

பங்களாதேஷில் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்ட பங்களாதேஷ் ஜமாஅத்-ஏ-இஸ்லாமியின் முன்னால் தலைவர் சஹீத் அப்துல் காதர் முல்லா அவர்களின் இறுதி வார்த்தைகள்.
நான் உங்களது பொறுப்பாளனாக இருந்தேன். இந்த அரசாங்கம் என்னை அநியாயமாகக் கொலை செய்யுமாக இருந்தால் அதை நான் சஹாதத்தாகவே ஏற்றுக் கொள்கிறேன். எனது சஹாத்துக்குப் பின் அல்லாஹ்வே உங்களது பொறுப்பாளன். அவனே சிறந்த பொறுப்பாளன். எனவே நீங்கள் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை.
நான் நிரபராதி என்பதில் சந்தேகமே இல்லை. நான் இஸ்லாமிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டதனாலேயே கொலை செய்யப்படுகின்றேன். எல்லோருடைய கதுரிலும் சஹாதத் எழுதப்பட்டில்லை. அல்லாஹ் எனக்கு சஹாதத்தை தந்தால் அதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். சஹாதத் எனது வாழ்க்கையில் சிறந்த சாதனையாகக் இருக்கும். எனது ஒவ்வொரு இரத்தத் துளியும் இஸ்லாமிய இயக்கத்தைப் பலப்படுத்துவதோடு, ஏகாதிபத்தியவாதிகளுக்கு சாவு மணியாகவும் இருக்கும். நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனது கவலை எல்லாம் இந்த தேசத்தைப் பற்றியும் இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றியுமாகும்.
எனது அறிவுக்கு எட்டியவகையில் நான் எந்தத் தவறுகளையோ குற்றங்களையோ செய்யவில்லை. எனது முழு வாழ்நாளையும் இஸ்லாமிய இயக்கத்துக்காக அர்ப்பணித்துள்ளேன். நான் அநீதிக்கு முன்னால் தலை குனிந்ததில்லை, அல்லாஹ்வின் உதவியால் இதன் பிறகும் தலைகுனிய மாட்டேன். எந்த உலக சக்திக்கும் முன்னால் உயிர் பிச்சை கேட்பேன் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். மரணத்தையும் வாழ்வையும் தீர்மானிக்கும் ஏக அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே. அல்லாஹ் எனது விதியைத் தீர்மானிப்பான். எந்தத் தனி மனிதனின் தீர்மானத்திலும் நான் தண்டனைக்க்குட்படுத்தப் படமாட்டேன். எனது சஹாதத்தின் நேரமும் நாளும் சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்வால் தீர்மானிக்கப்படும். அவனது தீர்மானம் எதுவாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்வேன்.
நீங்கள் பொறுமையாக இருங்கள். பொறுமையிலும் சகிப்புத்தன்மையிலுமே அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் இருக்கிறது. ஆகிராவின் விமோசனமே எமது ஒரே வேட்கை. எனது சஹாதத்தை ஏற்றுக்கொள்ளும் உங்களிடம் நான் எதிர்பார்ப்பது பிரார்த்தனையையும் ஆதரவையுமே. எனது நாட்டு மக்களின் பிரார்த்தனைகளுக்கும், உதவிகளுக்கும் நான் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
Source: JIB
Last words of Abdul Quader Molla

Thanks: Puttalam Online 

Post a Comment

0 Comments