பேஸ்புக்கில் வந்த புகைப்படத்தால் திருமணமான புது பெண் தற்கொலை செய்து
கொண்டுள்ளார் !!சென்னை திருவான்மியூர் பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த அனு
(23). இவர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் ரமேஷ் பாபு என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
இவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் சென்னையில் பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில், எதிர் பாராதவிதமாக, கணவர் ரமேஷ் பாபு மனைவி அனுவின்
பேஸ்புக் பக்கத்தைப் பார்க்க நேரிட்டது. இதில் அனுவும் அவருடன் பணியாற்றும்
ஒருவரும் சேர்ந்து இருந்த புகைப் படம் வெளியாகியிருந்தது. இந்தப் புகைப்
படம் குறித்து, ரமேஷ்பாபு மனைவி அனுவிடம் விசாரித்துள்ளார். இதனால்
இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த அனு தன் தாத்தா
வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து
கொண்டார். புது மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments