காலி பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பிக்கு அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 27 ம் திகதி இரவு சந்தேக நபரான பிக்குவுக்கும், பொலிஸ் கான்ஸ்டபிளான அந்நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்தே குறித்த பிக்கு அந்நபரைத் தாக்கியுள்ளதாகவும், காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் விசாரணைகளில் தெரியவருகின்றது.


0 Comments