வருடத்தின் இறுதி பௌர்ணமி தினமான இன்று (16) பதுளையில் சூரிய ஒளியை
காணமுடியவில்லை. குறித்த பிரதேசம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ள அதேவேளை,
அப்பிரதேசத்தின் வெப்பநிலை 18 செல்சியஸாக காணப்படுகிறது. இதனால் குறித்த பிரதேசத்தில் கடும் குளிர் நிலவுவதாகவும் நுவரெலியாவிலும் கடும் குளிரான காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று ஆரம்பித்த நிலையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் மலை உச்சியில் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
சுப்வனொளிபாதமலை உச்சியில் வெப்பநிலை 12 செல்சியஸ் பாகையாகக் காணப்படுகின்ற நிலையில் பக்தர்கள் கடும் குளிருக்கு மத்தியில் இன்றைய தின வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments