Subscribe Us

header ads

இந்த அரசாங்கத்திற்கு மலசலகூட வரி மாத்திரமே எஞ்சியுள்ளது - ரணில்

ஆணைக்குழுக்களை கிடப்பில் போட்டுவிட்டு அரசாங்கம் தரகு பணத்தை அபகரித்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு ஆணைக்குழு நிறைவு பெறும் போது மற்றொரு ஆணைக்குழுவை அமைப்பது போல் ஒரு விடயத்தில் தரகு பணம் அபகரித்துவிட்டு மறுவிடயத்தில் தரகு பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பள ஆணைக்குழு அமைத்துள்ள போதும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கவில்லை என சிறிகொத்தவில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நெத்தலி தொடக்கம் பெண்களின் கைக்குட்டை வரை வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மலசலகூட வரி மாத்திரமே எஞ்சியுள்ளதெனவும் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணம் வழங்க பணம் இல்லை எனக் கூறும் அரசாஙக்ம மத்தல விமான நிலையம், ஜயசூரிய விளையாட்டு மைதானம் அமைத்து கசினோவுக்கு 25 வருட வரி நிவாரணம் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் ஊழியர் சேமலாப நிதியை கொள்ளையிட அரசாங்கம் முயற்சித்து வருவதாக ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தினார்.

2005ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் கடன் சுமை 1.8 ட்ரிலியனாக இருந்ததெனவும் 2013ம் ஆண்டு அது 6.6 ட்ரிலியனாக அதிகரித்துள்ளதெனவும் 55 வருடமாக நாட்டின் கடன் சுமை 1.8 ட்ரிலியனாக காணப்பட்ட நிலையில் இந்த அரசாங்கம் 8 வருடத்தில் அதனை 4.8 ட்ரிலியனில் அதிகரித்துள்ளதாகவும் ரணில் தெரிவித்தார்.

(நன்றி: அத தெரண) 

Post a Comment

0 Comments