மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னதட்டுமுனையில் பாம்பு
தீண்டியதனால் இரண்டு மாதங்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
சின்னதட்டுமுனையை சேர்ந்த கிருஸ்ணரட்னம் அக்ஸன் என்ற இரண்டு மாதங்களும் 14 நாட்டுகளுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை பால் கட்டி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு
நேற்று கொண்டு செல்லப்பட்ட நிலையில் அது பாம்பு தீண்டியதாலேயே
உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
0 Comments