Subscribe Us

header ads

கலா பூஷணம் விருது -2013

(அஷ்ரப் ஏ சமத்)
அரச விருது-  கலாபூஷணம்  2013  கொழும்பு ரோயல் கல்லூரி நவரங்கரக மண்டபத்தில் கலாச்சார, கலை விவகார அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர். ஏ.எச்.எம் அஸ்வர், புரவலர் ஹாசீம், கலாச்சார அமைச்சின் செயலாளர் வசந்த எக்கநாயக்க முஸ்லீம் கலாச்சார திணைக்களம்,  ஹிந்து கலாச்சார திணைக்களம், கலாச்சார திணைக்களம் ஆகிய பணிப்பாளர்களும் கலந்து கொண்டு இலக்கியம் ,இசை,நாடகம், மற்றும் சிற்பம், நடனம், ஊடகம் என 285 கலைஞர்களுக்கு கலாபூஷணம் அரச விருது வழங்கப்பட்டது. அதில் சிங்களமொழி முல கலைஞர்கள் 191, தமிழ் மொழி முலம் 69, முஸ்லீம் கலைஞர்கள் 25 அடங்குகின்றனர். இதில் 80 வயதுக்கு மேற்படோர் மற்றும் வடகிழக்கினைச் சேர்ந்த ஏறாளாமான கலைஞர்களும் அடங்குகின்றனர்.

புத்தளம் சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியாளர் ஜனாப் புல்கி, கொழும்பு தினகரன் ஊடகவியாளர்களான  புஸ்பராஜா, கரீம், மற்றும் அகதியா பாடசாலை அமைப்பாளர் பானந்துறை அஸ்வர், சாய்ந்தமருது ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆதம்பாவா, அக்கரைப்பற்று அதாவுல்லா அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவுத், கல்முனை உடற்பயிற்சி மற்றும் சாரணர் விரிவுரையாளர்  எம். எம். முஸ்தபா, வெலிப்பண்னை அத்தாஸ்  போன்ற பலரும் அடங்குகின்றனர். 














(Thanks: Puttalam Online)

Post a Comment

0 Comments